Friday, March 15, 2013

இலங்கை தமிழர் போராட்டம் தவறு என்று கூறிய நீதிபதியின் நீதிமன்றத்துக்கு பூட்டு!

இலங்கை தமிழர் போராட்டம் தவறு என்று கூறிய நீதிபதியின் நீதிமன்றத்துக்கு பூட்டு!


மதுரைக்கு வந்த சோதனை!

மதுரைக்கு வந்த சோதனை!

"இலங்கைத் தமிழர்களுக்காக மேற்கொள்ளப்படும் போராட்டம் தவறு" என்று கருத்து தெரிவித்த மதுரை மாவட்ட நீதிபதியை வழக்கறிஞர்கள் கண்டித்துள்ளனர். இத்துடன் அவர் பணிபுரியும், குற்றவியல் நீதிமன்றத்துக்கு இன்று காலை 'மர்ம நபர்கள்' பூட்டு போட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் மாணவர்களின் போராட்டத்துக்கு மதுரையில் வெவ்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த 4-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம், "இலங்கைத் தமிழர்களுக்காக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது தவறு. அதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்" என்று கருத்து தெரிவித்தார்.

நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்த விபரம், வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று காலை வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர், நீதிபதி ராஜலிங்கத்தைக் கண்டித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர்.

அதில், நீதிபதி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நீதிபதி ராஜலிங்கம் பணிபுரியும், குற்றவியல் நீதிமன்றத்துக்கு இன்று காலை 'மர்ம நபர்கள்' பூட்டு போட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதைச் செய்தவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. மதுரை போலீஸ் தீவிரமாக துப்பு துலக்கி வருகின்றனர்.

LATEST 5 ON VIRUNEWS
1. WORLD: Hackers publish CIA Director Brennan's financial recordsSaturday 16 March 04:46 GMT
2. New York woman holding baby falls from 8th floor to her deathFriday 15 March 07:55 GMT
3. SRILANKA: US to present UNHRC resolution on Sri lanka todayFriday 15 March 06:23 GMT
4. AIRLINE: We could be back up and going in weeks and not months-SinnettFriday 15 March 05:20 GMT
5. WORLD: Mysterious Customer Orders 115 Bottles Of Wine To Be Sent To Vatican CityThursday 14 March 15:24 GMT
லேட்டஸ்ட் 10 செய்திகள்
'இம்சை அரசன்' வடிவேலுவிடம் இருந்து சிம்பு தேவன் ஜூட்! "ஆ.. பேயி! நாக்கை கடிக்குது"Friday 15 March 14:07 GMT
இத்தாலிய தூதரை தடுக்க அனைத்து இந்திய ஏர்போர்ட்டுகளும் உஷார்! தகவல் நிஜமா?Friday 15 March 13:27 GMT
இலங்கை தமிழர் போராட்டம்: தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகள் மூடப்படுகின்றன!Friday 15 March 13:03 GMT
அதிர்ச்சி அடைந்தார் நடிகை சோனா! "எனக்கு தெரியாமல் பார் ஒன்றில் டான்ஸ் ஆடினேனா?"Friday 15 March 08:00 GMT
19 மீனவர்களை பிடித்ததால் இலங்கை தூதருக்கு எச்சரிக்கை செய்தபின் 34 மீனவர்கள் கைது!Friday 15 March 07:52 GMT
பின்லேடன் கொலை ஆபரேஷனில் உதவிய டாக்டர் அஃப்ரீடியின் நர்ஸூகள் 17 பேரும் எங்கே?Friday 15 March 07:30 GMT
இலங்கை தமிழர் போராட்டம் தவறு என்று கூறிய நீதிபதியின் நீதிமன்றத்துக்கு பூட்டு!Friday 15 March 07:18 GMT
பாலாவின் 'பரதேசி' முதல் நாள் விமர்சனம்: ஆளை ஒரேயடியாக தூக்கி அடிக்கும் படம்!Friday 15 March 06:03 GMT
பிரியாமணி எகிறல்: 'சண்டி' ஷூட்டிங்கில் நான் ரிலாக்ஸ் செய்த போட்டோ உமக்கு ஆபாசமா?Friday 15 March 05:30 GMT
"தமிழக மீனவர்கள் யுத்தம் புரியவா கடலுக்கு செல்கிறார்கள்?" தி.மு.க. எம்.பி. அதிரடி கேள்வி!Friday 15 March 05:05 GMT

No comments:

Post a Comment